தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருச்சி 63வது வார்டில் ஒரு சிறுமிக்கு டெங்கு பாதிப்பு இருந்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதுகுறித்து பேசிய அரசு மருத்துவமனை டீன், “டெங்கு காய்ச்சலால் தலைவலி, உடல்வலி, வயிற்றுவலி, வாந்தி, குமட்டல், காய்ச்சல் போன்ற டெங்கு அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும். அவர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும். வீடுகளுக்கு முன்பு தண்ணீர் தேங்க விடாமல், கொசு உற்பத்திக்கான ஆதாரங்களை அழித்தால் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க முடியும். மேலும், டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகம் இருந்தால் அரசு மருத்துவமனையில் அதற்கென தனியாக ஒரு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று அரசு மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.