Skip to main content

அப்பொழுதே "மைனரை" கட் செய்திருந்தால், பாலியல் வல்லுறவு, கொலை நடந்திருக்காது!!!

Published on 13/07/2018 | Edited on 13/07/2018

மூன்று வருடங்களாக வக்கிர புத்தி கொண்ட ஊர் மைனர் ஒருவன் பாலியல் சேஷ்டைகளில் ஈடுபட, "அபராதத்தை" மட்டும் விதித்து அவனைத் தப்பிக்க விட்டிருக்கின்றது ஆலமரத்து பஞ்சாயத்து. அப்பொழுதே அந்த "மைனரை" கட் செய்திருந்தால் இப்பொழுது வாய் பேச முடியாத, காது கேளாத சிறுமியை பாலியல் வல்லுறவாகி உயிரை இழந்திருக்கமாட்டாளே.!" என வாய்மூடி மௌனியாக சோகத்தில் இருக்கின்றது சிவகங்கை மாவட்டம் கீழசேவல்பட்டி அருகிலுள்ள அச்சரம்பட்டி கிராமம்.
 

 

 

செவ்வாய்க்கிழமையன்று நண்பகல் 1 மணி வேளையில், அக்கம் பக்கத்தார் குரல் கொடுக்க அரைகுறை நிர்வாணத்துடன், தலையிலிருந்து ரத்தம் ஓடி நின்ற நிலையில் குளிக்க சென்ற புதர் மறைவிலேயே பிணமாக கிடந்திருக்கின்றார் வாய் பேசமுடியாத 17 வயது சிறுமியான அழகுதேவி.

நூறு நாள் வேலைக்கு சென்ற அம்மா கருப்பாயிக்கும், விவசாய கூலிக்கு சென்ற அழகுவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றியதோடு மட்டுமில்லாமல், உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


 

 If you had cut the "Minor" then, the rape and murder would not have happened !!!


 

ராமநாதபுர சரக டி.ஐ.ஜி. காமினி,  மாவட்டக் காவல்துறைக் சுண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் நேரில் ஆய்வினை நடத்த, டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து சிறுமியை கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து கொலையாளியை விரைந்து பிடிக்க உத்தரவிட்டனர்.

சிறிது நேரத்தில் மோப்ப நாய் லைக்கா வரவழைக்கப்பட கொலையாளி அருகிலுள்ள "மைனர்" மாணிக்கமே என உறுதி செய்யப்பட்டான். சரியாக இரவு 11 மணிக்கு கொலை நடந்த 12 மணி நேரத்திற்குள்ளேயே, கொலையாளியிடம் ஒப்புதல்  வாக்குமூலத்தை வாங்கி அவனை கைது செய்தது சிவகங்கை மாவட்ட காவல்துறை.
 

 

 


"சம்பவத்தினத்தன்று காலையிலேயே அழகாபுரி ஊருக்கு சென்று மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தேன். அப்பொழுது இந்த சிறுமி குளிப்பதற்காக செல்ல, மதுபோதையில் இருந்த நான் அவரை பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கிவிட்டேன். அலங்கோல ஆடைகளுடன் இருந்த அவர் எப்படியும் என்னை அடையாளம் காட்டிவிடுவார் என எண்ணி அருகிலிருந்த இரும்புக் கம்பிக் கொண்டு தலையில் அடித்துக் கொன்று விட்டேன்." என ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கிய கொலையாளி "மைனர்" மாணிக்கத்திற்கு கடந்த இரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் முன்பு இதே கிராமத்தில் இது போல் பாலியல் சீண்டல் செய்ய, ஊரில் பெரிய குடும்பம் என்பதால் ஆலமரத்து பஞ்சாயத்து அபராதம் மட்டும் "மைனரை" தப்பிக்கவிட்டது. "தப்பு செய்தான். அது தான் "மைனரை"  சுட்டுட்டேன்." என திரைப்படத்தில் நடிகர் விவேக் செய்தது போல் அப்பொழுதே போலீஸிடம் இவனை ஒப்படைத்திருந்தால் அந்த சிறுமிக்கு இந்த நிலை வந்திருக்காது.!

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.