சூழலியல் செயற்பாட்டாளர் தோழர் முகிலன் கூடன்குளம் போராட்டத்திற்காக (13 வழக்குகள் ) கைது செய்யப்பட்டு பாளை சிறையில் வைக்கப்பட்டிருந்து ஜூலை முதல் நாள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றி தனி வளாகத்தில் அடைத்து மேலும் பல வழக்குகளை போட்டுள்ளனர். முகிலன் சிறைபட்டு 360 நாட்கள் ஆன நிலையில் கூடன் குளம் போராட்ட வழக்குகளில் பிணை கிடைத்துள்ளது. மற்ற அதனால் இன்னும் பல புதிய வழக்குகள் பதிவாகலாம் என்ற நிலையில் முகிலனுடன் இணைந்து போராட்டங்களை சந்தித்து வந்த ராஜேஸ்வரி மதுரை சிறையில் உள்ள முகிலனை மனுபார்க்கச் சென்ற போது வழக்கமாக விபரங்கள் கொடுக்கும் இடத்தில் விபரங்களை பெற்றுக் கொண்ட சிறை காவலர்கள் முன்னால் உள்ள அறையிலும் தகவல்களை கொடுங்கள் என்று அனுப்பியுள்ளனர்.
சிறைவளாகத்தில் தனிஅறையில் இருந்த கியூ பிராஞ்ச் அதிகாரிகள் பெயர் விபரங்களுடன் சுயவிபரங்களையும் பதிவு செய்துள்ளனர். இது பற்றி முகிலன் சிறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்த பிறகும் விசாரணை நடப்பதால் ராஜேஸ்வரி சிறை துறை டிஐஜியிடம் புகார் கொடுத்துள்ளார். வரம்பு மறி விசாரனை நடக்கிறது. சிறை விதிகளை மறந்துள்ளனர். ஆகவே நடவடிக்கை எடுக்க கேட்டுள்ளனர்.
இதுபற்றி ராஜேஸ்வரி நம்மிடம்..
சிறை விதிகளை மதிக்காமல் விசாரணை நடப்பதை சிறை அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் ரவிச்சந்திரனை பார்க்க வரும் நபர்களை பற்றிய விபரம் சேகரிக்கிறார்கள். என்றனர் ஆனால் சிறையில் அறை கொடுத்திருக்கிறார்கள். இந்த செயல் என்னைப் போன்றவர்களை அச்சுறுத்துவதாக உள்ளது என்றார்.