திண்டிவனத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு கட்சி பணம் கொடுக்காது. நீங்களும் செலவிட வேண்டாம். மக்களை நம்புங்கள். தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை நாம்தான் நிரப்பவேண்டும். நம்மிடம் உள்ளது போல மனித வளம் எந்த கட்சியிலும் கிடையாது. வன்னியர் சங்கமும், பாமகவும் இரண்டு தண்டவாளங்களாக இணைந்து நில்லுங்கள்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு தாமதமானால் சாகும் வரை தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு என் உயிரையும் விடுவேன். பா.ம.க. நான் எதிர்பார்த்த அளவுக்கு வளரவில்லை. பா.ம.க.வினர் கட்சியை வளர்க்க வில்லை. அப்படி வளர்த்து இருந்தால் கூட்டணியில் 10 அல்லது 14 இடங்கள் வரைக்கும் வெற்றி பெற்று இருப்போம். இன்னும் கூடுதலாக 5 இடங்கள் வரைக்கும் வெற்றி பெற்று இருந்தால் அங்கீகாரம் கிடைத்து இருக்கும்.
தமிழ்நாட்டில் நாம் தமிழை வளர்க்க முன்வாரவிட்டால் யார் வளர்ப்பார்கள். தமிழை வளர்க்க ஆர்வம் காட்டாவிட்டால் நீங்கள் இங்கிலாந்திலிருந்து வந்த வெள்ளைக்காரன் என்று சொல்லிவிடுவேன். ஜாக்கிரதை” என்று பேசினார்.