Skip to main content

“என் நாய் இறப்புக்கு உண்மை காரணம் தெரிய வேண்டும்...” நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பெண்..!

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

"I want to know the real cause of my dog's case..." The woman who sued in court ..!
                                                      மாதிரி படம்

 

திருவள்ளூர் மாவட்டம், மணவூரைச் சேர்ந்த சுமதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘நான் வளர்த்துவந்த ஒன்பது வயது ஜெர்மன் ஷெப்பர்ட் நாய், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டபோது, கடம்பத்தூர் கால்நடை மருத்துவர் அளித்த மருந்து காரணமாக கோமா நிலையை அடைந்துவிட்டது.

 

பிறகு நாயைப் பரிசோதித்த வேப்பேரி கால்நடை மருத்துவமனை மருத்துவர், தவறான மருந்து கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, கடம்பத்தூர் மருத்துவருக்கு எதிராக போலீசில் புகார் அளித்தேன்.  அதன்பின், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவர்கள், எனது நாய்க்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். அதன் காரணமாக, எனது நாய் கடந்த டிசம்பர் மாதம் இறந்துவிட்டது.

 

நாயின் மரணத்திற்கான உண்மை காரணத்தைக் கண்டறிய, பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்.  மருத்துவர்களுக்கு எதிராகவும் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியுள்ளார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் மனு குறித்து விளக்கமளிக்க, தமிழக அரசுக்கும், கால்நடைத் துறை இயக்குனர் உள்ளிட்டோருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்