திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. சார்பாக வேலுச்சாமி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. உறுப்பினருமான இ.பெரியசாமி அவர்கள் வேட்பாளர் வேலுச்சாமியுடன் ஆத்தூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராம ஊராhட்சிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பாளையங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கூலம்பட்டியில் பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து பிரவான்பட்டி, பாளையன்கோட்டை, சித்தையன்கோட்டை, சித்தரேவு, நெல்லூர் மற்றும் சொக்கலிங்கபுரம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிரமாக பிரச்சாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்பொழுது பாளையன்கோட்டையில் மக்கள் மத்தியில் பேசிய திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமியோ...
கடந்த 12 வருடத்திற்கு முன்பு தமிழக முதலமைச்சராக மறைந்த தலைவர் கலைஞர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். அதனால் பல கிராம பெண்கள் தனது மகளின் திருமணத்திற்காக வங்கியில் அடமானம் வைத்திருந்த நகைகளை மீட்டு அவர்களின் திருமணங்களை நடத்தினார்கள். காரணம் ஏழை, எளிய மக்களின் நலன்களை அக்கறை கொண்ட தலைவராக இருந்தததால் அன்று விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார்.
இப்போது தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் வழங்குவோம் என அறிவித்துள்ளனர். இது வரவேற்கத்தக்க அறிவிப்பு. இதனால் கிராமங்களில் உள்ள ஏழை விவசாயிகள் பயனடைவார்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது 100நாள் வேலைத்ததிட்டம், 150 மற்றும் 200 நாட்களுக்கு உயர்த்தப்படுவதோடு கூலித்தொகையும் அதிகரித்து கிடைக்கும்.
கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சாலைப் பணியாளர் வேலைக்கு அதிக அளவில் கிராமப்புற ஏழை இளைஞர்கள் மற்றும் தலித் சமுதாய இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு சாலை பணியாளர்கள் பணியும் வேலைவாய்ப்பும் கிடைக்கும். இதற்கு ஒரு பைசா கூட லஞ்சம் தர தேவையில்லை என்று கூறினார். இந்த பிரச்சாரத்தின் போது அங்கங்கே வாக்காள பெருமக்கள் ஐ.பெரியசாமிக்கும், வேட்பாளர் வேலுச்சாமிக்கும் கும்ப மரியாதையுடன் ஆராத்தியும் எடுத்து வந்தனர்.
இந்த தேர்தல் பிரச்சாரத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் மார்கிரேட் மேரி, ஆத்தூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் முரளிதரன், ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் இராமன், விவேகானந்தன், அவைத்தலைவர் காணிக்கைராஜ், துணைச் செயலாளர் மல்லையாபுரம் சக்திவேல், கலாபச்சை, பொருளாளர் தேவரப்பன்பட்டி போஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆத்தூர் நடராஜன், நெல்லூர் மலைச்சாமி, அய்யம்பாளையம் ரமேஷ் உட்பட நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.