Skip to main content

என்னுடைய மணி விழாவுக்கு அழைக்கவே ஸ்டாலினைச் சந்தித்தேன்: எச்.ராஜா பேட்டி

Published on 14/09/2017 | Edited on 14/09/2017
என்னுடைய மணி விழாவுக்கு அழைக்கவே ஸ்டாலினைச் சந்தித்தேன்: எச்.ராஜா பேட்டி

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

''இந்த சந்திப்பில் எள்ளளவும் அரசியல் இல்லை. அரசியல் வேறு, நட்பு வேறு என்பதில் தெளிவாக இருக்கிறேன்.என்னுடைய மணி விழாவுக்கு அழைக்கவே ஸ்டாலினைச் சந்தித்தேன். திமுக தலைவர் கலைஞரின் உடல் நலம் சரியில்லாததால், அவரை அழைக்கவில்லை. அவரின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்தேன்.

எனது தந்தை ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தின் சாரண, சாரணியர் இயக்கத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேல் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். அதனால், அந்த இயக்கத்தோடு சிறுவயது முதல் எனக்கு தொடர்பு உண்டு. நண்பர்கள் உண்டு. அந்த அடிப்படையில் சாரண, சாரணியர் இயக்கத்தில் உள்ள நண்பர்கள் விரும்பி கேட்டுக் கொண்டதால் அதன் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். நிச்சயம் வெற்றியும் பெறுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்