Published on 22/03/2022 | Edited on 22/03/2022
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜரான பின் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது, "ஆறுமுகசாமி ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய, உண்மையான பதிலை அளித்துள்ளேன். ஏழு முறை சம்மன் அனுப்பப்பட்டு, ஆறு முறை எனக்கு கடிதம் வந்தது. இரண்டு முறை சொந்த காரணங்களாலும், பட்ஜெட் தாக்கலின் போதும் நேரில் ஆஜராக முடியவில்லை. ஆறுமுகசாமி ஆணையத்தில் முரண்பட்ட பதில் எதையும் நான் தெரிவிக்கவில்லை. ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில் முழு திருப்தியும், நிறைவும் உள்ளது" என்றார்.
இதனிடையே, சசிகலா குறித்து பேசும் போது, சின்னம்மா மீது தனிப்பட்ட முறையில் மதிப்பும், மரியாதையும் உள்ளது என்றார் ஓ.பன்னீர்செல்வம்.