தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், பரப்புரை உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக இயங்கிவருவதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடந்த திமுக தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ''திருவாரூரில் என்னுடைய 13 வயதிலேயே இந்திக்கு எதிரான போராட்டத்தில் கலைஞருடன் பங்கேற்றேன். மாணவனாக இருந்தபோது மாணவர்களை ஒன்றுதிரட்டி இந்திக்கு எதிராக வீதியில் இறங்கி போராடினேன். மாணவரணி உள்ளிட்ட பல பதவிகளில் பொறுப்பு வகித்து இறுதியில் திமுக தலைவராகியுள்ளேன்.'' என்றார்.