Skip to main content

“வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்புவேன்”… சொத்துக்காக மனைவியை மிரட்டிய கணவன்

Published on 24/09/2022 | Edited on 24/09/2022

 

HUSBAND AND WIFE INCIDENT SALEM DISTRICT AMMAPET POLICE STATION

 

சேலத்தில், பெற்றோரிடம் இருந்து சொத்துகளை எழுதி வாங்கி வராவிட்டால் குளிக்கும்போது எடுத்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்த கணவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சேலம் அம்மாபேட்டை எஸ்.கே.டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் சஹானா (வயது 29). இவருக்கும் கோரிமேட்டைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2017- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 

 

திருமணத்தின்போது வரதட்சணையாக 100 பவுன் நகைகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் சஹானா, அம்மாபேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், ''எனது கணவர் சவுந்தர்யா என்ற பெண்ணை எனக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 

 

என்னுடைய நகைகள் அனைத்தையும் கணவரும், உறவினர் சகுந்தலாவும் அடமானம் வைத்துள்ளனர். ஜெயபிரகாஷ், சகுந்தலா, சவுந்தர்யா, ஞானசேகரன் என்கிற கேபிள் பாபு, தீபக், சீனிவாசன் ஆகியோர் என்னுடைய தந்தையிடம் இருக்கும் சொத்தை எல்லாம் எழுதி வாங்கி வரும்படி மிரட்டுகின்றனர். 

 

சொத்துகளை வாங்கி வராவிட்டால் நான் குளிக்கும்போது ரகசியமாக எடுத்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் என்றும் மிரட்டி வருகிறார். என் கணவர் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று தெரிவித்துள்ளார். 

 

அதன்பேரில் ஜெயபிரகாஷ், சவுந்தர்யா, சகுந்தலா, ஞானசேகரன் என்கிற கேபிள் பாபு, தீபக், சீனிவாசன் ஆகிய 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்