Skip to main content

"சாத்தான்குளம் வழக்கை முடிக்க எவ்வளவு காலம் ஆகும்?"- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி!

Published on 13/12/2021 | Edited on 13/12/2021

 

"How long does it take to complete the Satankulam case?" - Madurai branch of the High Court question!

 

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல்துறை காவலில் இறந்த வழக்கை முடிப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும்? என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

 

சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கு சி.பி.ஐ. மாற்றப்பட்டு விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். 

 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை, இந்த வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றம் ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. கடந்த மார்ச் மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில், கரோனா உள்ளிட்ட காரணங்களால் ஆறு மாதத்திற்குள் இந்த வழக்கு விசாரணையை முடிக்க இயலவில்லை. ஆகவே, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கை முடிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாவட்ட நீதிமன்றம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

 

இந்த வழக்கை இன்று (13/12/2021) விசாரித்த நீதிபதி முரளி சங்கர்,  “சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் தற்போது வரை விசாரணை எந்த நிலையில் உள்ளது. விசாரணையை முழுவதும் நடத்தி முடிக்க  எவ்வளவு காலம் ஆகும் என்று கேள்வி எழுப்பினார். அத்துடன், இது தொடர்பாக, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 17- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்”. 

 

சார்ந்த செய்திகள்