இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று (02.11.2021) தொடங்கி வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 106 முகாம்களில் வசிக்கும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்களுக்கு சுமார் 225.86 கோடி செலவில் புதிய வீடுகள் கட்டும் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கிவைத்தார். இதில், புதிய வீடுகள் கட்டுதல், திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு, வாழ்க்கை தர மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன. இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், "தமிழர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் ஒரு தாய்மக்களே. தமிழகத் தமிழர்களையும், இலங்கைத் தமிழர்களையும் பிரிப்பது கடல் மட்டுமே. நாம் அனைவரும் எப்போதும் ஒன்றானவர்கள். நமக்குள் எந்த வேற்றுமையும் இல்லை" என்றார்.