விடுமுறை நாளிலும் மருத்துவ கவுன்சிலிங்: சுகாதார செயலர்
சென்னை ஓமந்தூர் பல்நோக்கு அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில், நீட் தேர்வு அடிப்படையில் சிறப்பு பிரிவு மாணவருக்கான மருத்துவ கவுன்சிலிங் துவங்கியது. இதனை சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசய ராதாகிருஷ்ணன், சனி, ஞாயிறு, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விடுமுறை நாளிலும் கவுன்சிலிங் நடக்கும். டிடி கொண்டு வர முடியாதவர்கள் ரொக்கமாக பணம் செலுத்தலாம். செப்டம்பர் 6 வரை கலந்தாய்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. பொறியியல் சேர்ந்த மாணவர்கள், சுய அத்தாட்சி கடிதத்துடன் மருத்துவ கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம். மாணவர்கள் சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தை தொடர்ந்து பார்த்து வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இன்று நடக்கும் கலந்தாய்வில் மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவை சேர்ந்த 86 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். மாற்று திறனாளிகள் 20 பேரும், விளையாட்டு பிரிவை சேர்ந்த 6 பேரும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் 60 பேரும் கலந்தாய்வில் கலந்து கொள்கின்றனர்.
படங்கள்: ஸ்டாலின்