காங்கிரஸ் கட்சி சிறுபான்மைதுறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. இந்து மன்னரால் ஆளப்பட்ட பகுதி. மன்னர் ஹரிசிங் காஷ்மிர் தனிநாடாக அறிவித்தார். மன்னர் ஹரிசிங்கின் அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராக ஷேக்அப்துல்லா களம் இறங்கினார். அவரின் தேசிய மாநாட்டு கட்சி மதசார்பற்ற காஷ்மீர் என்பதே தனது இலட்சியம் என அறித்தார். இடதுசாரிகளின் ஆதரவு ஷேக்அப்துல்லாவிற்கு பலமாக இருந்தது. காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதே காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பு என்று நம்பினார். பதான் பழங்குடி மக்கள் படையெடுப்பு பாக்கிஸ்தான் ஆதரவு ஐ.நா. பஞ்சாயத்து பொதுவாக்கெடுப்பு என நீண்டு இறுதியாக 370 என்ற சிறப்பு சட்டம் என்கிற அந்தஸ்த்துடன் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
இந்திய வரலாறு தெரியாத மோடி அரசு, ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை அமல்படுத்த முனைகிறது. ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என பிதற்றுகிறது. ஆரியர்கள் இருந்தார்கள், முஸ்லீம்கள் வந்தார்கள் என்ற திரிபு வரலாற்றை உறுதிசெய்யும் நடவடிக்கையே காஷ்மீர் விவகாரம். நாடாளுமன்றத்தில் ஒரு முஸ்லீம் உறுப்பினர்கூட இருக்கக்கூடாது. ஒரு முதலமைச்சர் கூட இருக்கக்கூடாது என்பதன் வெளிப்பாடுதான் காஷ்மீரின் மாநில அந்தஸ்த்து நீக்கம். இதன் மூலம் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கான மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே பாஜக நோக்கம்.
முஸ்லீம்கள் வந்தேரிகளே என வரலாற்றை மாற்ற பாஜக முயற்சிக்கிறது. அது இந்தியாவிற்கு பேராபத்தாக முடியும் என்பதை உணராமலேயே செய்கிறது. ஆரியர்கள் தங்கள் சூத்திர அடிமைகளைக்கொண்டு நடத்ததும் நாடகம் அவர்களுக்கு எதிராகவே திரும்பும் என்பதை உணர வேண்டும். வரலாற்றை உங்கள் விருப்பத்திற்கு வளைக்க நினைத்தால் ஹிட்லரின் வரலாறை உலகே சொல்லும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.