Skip to main content

அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி குண்டாஸில் கைது

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

kl;

 

அம்பேத்கரின் நினைவு தினம் டிசம்பர் 6 ஆம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருவது வழக்கமான நடைமுறையாக இருந்து வரும் நிலையில், அன்றைய தினம் பல்வேறு அரசியல் கட்சியினரும் சமுதாய அமைப்பினரும் அண்ணல் அம்பேத்கரின் உருவச் சிலைக்கும் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

 

இந்நிலையில், கடந்த மாதம் 6ம் தேதி இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளரான கும்பகோணத்தைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவர் அம்பேத்கர் படத்திற்குக் காவி உடை அணிவித்து விபூதி பூசியும் குங்குமம் வைத்தும் கும்பகோணம் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருந்தார். இந்தப் போஸ்டர் ஒட்டுமொத்த சமூக ஆர்வலர்களையும் அம்பேத்கரியவாதிகளையும் கொதிப்படையச் செய்தது. 

 

இந்த சம்பவம் அங்கு பெரிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த கும்பகோணம் போலீசாரே போஸ்டரை கிழித்து அப்புறப்படுத்திய நிலையில், போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் குரு மூர்த்தியை கைது செய்திருந்தனர். இந்நிலையில் கும்பகோணம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குரு மூர்த்தியை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளார்கள். மேலும் அவரை திருச்சி மத்தியச் சிறைக்கும் காவல்துறையினர் மாற்றியுள்ளார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்