சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை(17.10.2024) 86 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ரவி மற்றும் தமிழக உயர்கல்வித்த துறை அமைச்சர் கோவி. செழியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
இந்நிகழ்வின் முன்னதாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அண்ணாமலை பல்கலைக்கழக வாயிலில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சரை திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் கதிரவன் வரவேற்றார்.
இந்நிகழ்வில் கடலூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஐயப்பன் நெய்வேலி தொகுதி சபா. ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் மலையரசன், முன்னாள் எம்.எல்.ஏ. மருது ராமலிங்கம். கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன், சிதம்பரம் நகர்மன்ற மூத்த உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு. சந்திரசேகரன், மணிகண்டன், திமுக குமராட்சி ஒன்றிய செயலாளர் சங்கர், நகரத் துணை செயலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.