Published on 02/12/2022 | Edited on 02/12/2022
கார்த்திகை தீபம் மற்றும் ஐயப்ப சீசன் காரணமாக கோயம்பேடு மலர் சந்தையில் பூக்கள் விலை தாறுமாறாக ஏறி உள்ளது. ஒரே நாளில் மல்லிகை பூ விலை 500 ரூபாய் உயர்ந்துள்ளது.
மதுரை, ஓசூர், திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சென்னை கோயம்பேடு மலர் சந்தைக்கு பூக்கள் வருவது வழக்கம். இந்நிலையில் கார்த்திகை தீபம் மற்றும் ஐயப்ப சீசன், திருமண முகூர்த்தங்கள் காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
900 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ மல்லிகை பூ தற்பொழுது 1300 முதல் 1200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 360 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஜாதிமல்லி 500 ரூபாய்க்கும், முல்லை பூ 750 ரூபாய்க்கும், கனகாம்பரம் 600 ரூபாய்க்கும், சாமந்தி 100 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 100 ரூபாய்க்கும், அரளி பூ 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.