Published on 20/11/2020 | Edited on 21/11/2020
ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடர தனியார் மருத்துவ கல்விக்கட்டணத்தைக் குறைத்து நிர்ணயிக்கக் கோரி கிரஹாம்பெல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (20/11/2020) விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஏழ்மை நிலையில் மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பிரபலங்கள் உதவ வேண்டும். நடிகர்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் மாணவரை தத்தெடுத்து கட்டணத்தை ஏற்க முன்வர வேண்டும். பொருளாதார சூழலால் மருத்துவப் படிப்பை பாதியிலேயே மாணவர்கள் கைவிடுவது வேதனை மிகுந்தது' என்று தெரிவித்த நீதிபதிகள் சுயநிதி கல்லூரிகளின் கட்டண நிர்ணயக்குழு, சுகாதார செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குநர் பதிலளிக்க ஆணையிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 27- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.