Skip to main content

மீராமிதுனுக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு..

Published on 27/08/2021 | Edited on 27/08/2021

 

High court extends custody of Meeramithun

 

வன்கொடுமை தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண்  நண்பரின் நீதிமன்ற காவலைச் செப்டம்பர் 9ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுனுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடைச் சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 


இந்த வழக்கு தொடர்பாக கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதையடுத்து  மீரா மிதுன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


இருவரின் நீதிமன்ற காவல் முடிந்ததை அடுத்து, இருவரும் இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 9ம் தேதி வரை (14 நாட்கள்) நீட்டித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் இருவருக்கும் ஏற்கனவே ஜாமீன் மறுக்கப்பட்டது  குறிப்பிட்டத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உண்மையிலேயே என் பொண்ண காணுங்க'-மீரா மிதுனின் தாய் புகார்

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

'Really my daughter missing' - Meera Mithun's mother complains

 

மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் சில மாதங்களுக்கு முன்பு பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டார். அது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீரா மிதுன் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மீரா மிதுனும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

 

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு தொடர்ந்து பலமுறை மீரா மிதுன் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். மீண்டும்  கடந்த 19.10.2022 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை மீராமிதுன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார் எனவும் அவரது குடும்பத்தினரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த மாதம் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் தனது மகளின் செல்போன் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருப்பதாகவும் தனது மகளை கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் மீரா மிதுனின் தாய் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

நடிகை மீரா மிதுன் வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு!

Published on 23/06/2022 | Edited on 23/06/2022
court postponed meera mithun case

 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுனுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடைச் சட்டம், கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் இருவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

 

இந்நிலையில் இது தொடர்பான விசாரணைக்காக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகிய இருவரும்  ஆஜராகச் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று(22.6.2022) நீதிமன்றத்தில் ஆஜரான அவர்களிடம் குற்றப்பத்திரிகையை நீதிபதி படித்துக் காட்டியதோடு, அது தொடர்பாகக் கேள்வியும் எழுப்பியிருந்தார். இதற்கு தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்த நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகிய இருவரும் இது தொடர்பான விசாரணையை எதிர்கொள்ளவதாக கூறியுள்ளனர். இதையடுத்து நீதிபதி வழக்கின் விசாரணையை அடுத்த மாதம்(ஜூலை) 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.