தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், ஏற்கனவே நீலகிரி மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நீலகிரி, கோவை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அதீத கன மழை பொழிய வாய்ப்பு இருப்பதால் தற்பொழுது மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு 'ரெட்அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் 'ரெட்அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசியில் மிக கனமழை பெய்யும் எனவும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், வேலூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலில் 3.5 மீட்டரிலிருந்து 4.2 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.