
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை (19/11/2021) காலை சென்னைக்கு அருகே கரையைக் கடக்கக்கூடும் என்றும், தொடர்ந்து கனமழை இருக்கும் என்றும் வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதால் நாளை (19/11/2021) ஒருநாள் மட்டும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.விஜயராணி இ.ஆ.ப. தெரிவித்துள்ளனர்.
கனமழை காரணமாக, விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, ராணிப்பேட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (19/11/2021) அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
அதேபோல், செங்கல்பட்டு, கடலூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார்கள்.
புதுச்சேரி மாநிலத்தில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.