வரும் ஆகஸ்ட் 29, 30 தேதிகளில் தமிழ்நாட்டில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், ஆகஸ்ட் 30ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 9 மாவட்டங்களில் இன்று (26/08/2021) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தேனி, புதுச்சேரியில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக் கூடும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதிவரை கனமழை தொடரும்.
சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். விழுப்புரம் அனந்தபுரம் - 10 செ.மீ., கள்ளக்குறிச்சி அரியலூர் - 8 செ.மீ., மூங்கில் துறைப்பட்டில் - 6 செ.மீ. மழை பதிவானது.