வங்கக்கடலில் உருவான 'டானா' புயல் தற்போது 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறதாக இந்திய மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவிரப் புயலாக மாறியுள்ள டானா புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை பூரி- சாகர் தீவுகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற நிலையிலும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் இன்று 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை, கன்னியாகுமரி,ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் அதேபோல் நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் என மொத்தமாக 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.