Skip to main content

ஊரடங்கு பணியில் இருந்த காவலர் மரணம்... துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதையுடன் உடல் அடக்கம்!!

Published on 10/05/2020 | Edited on 10/05/2020

உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மருத்துவத்துறை, காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள், வருவாய்துறை, தன்னார்வலர்கள் என பல துறை சார்ந்தவர்களும் உயிரைக் கொடுத்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கரோனா தொற்றின் வீரியம் அறியாமல் சுற்றிவரும் இளைஞர்களை பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நூதன தண்டனைகள் கொடுத்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பணியில்முழு நேரமும் ஈடுபட்டுள்ளனர் காவல் துறையினர். சுழற்சி முறையில இந்தப் பணிகள் அளிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று யாருக்கு இருக்குமோ என்று தெரியாமல் மன அழுத்தத்திலேயே இந்த பணியை செய்து வருகிறார்கள்.
 

 heart attack while on a curfew ...

 

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில உள்ள கரூர் மற்றும் ஏம்பல் காவல் நிலையங்களில் தனிப்பிரிவு போலீசாராக பணியாற்றி வந்த அண்ணாத்துரை ( 39 ) பல நாட்களுக்கு பிறகு நாகுடி காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு சென்று மனைவி குழந்தைகளில் பேசிவிட்டுபடுத்தவர் அதிகாலை நெஞ்சுவலி என்று துடிக்க அவரசமாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

 heart attack while on a curfew ...

 

அங்கே சென்ற போது அவரது உயிர் போய் இருந்தது. இதனால் அவரது இளம் மனைவி மற்றும் இரு குழந்தைகள் பரிதாபமாக தவிக்கவிடப்பட்டுள்ளார்கள்.  அவரது உடலை அவரது சொந்த ஊரான ஆவுடையார்கோயில் அருகில் உள்ள குருந்தங்குடி கிராமத்தி்ற்கு எடுத்துச் சென்று உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு மயானத்திற்கு எடுத்துச் சென்று அங்கு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்ட பிறகு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 

 heart attack while on a curfew ...


அண்ணாத்துரையில் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியி்ல் கலந்து கொண்ட உறவினர்கள் கூறும் போது.. அண்ணாத்துரைக்கு அமுதா (37) என்ற மனைவியும், தரணிஷ் (10), யஸவந்த் (2) என்ற கை குழந்தையும் உள்ளனர். அண்ணாத்துரையின் இழப்பு அவரது குடும்பத்திற்கு பெரிய இழப்பாக உள்ளது. அதனால் தமிழக அரசு மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அவரது மனைவிக்கு அவரது படிப்பிற்கு ஏற்ற ஒரு அரசு வேலை வழங்கினால் இரு குழந்தைகளையும் வளர்த்து படிக்க வைக்க வசதியாக இருக்கும். இல்லை என்றால் அந்த இளம் பெண் ஆதரவின்றி குழந்தைகளை வைத்துக் கொண்டு தவிக்க நேரிடும் என்றனர் கண்கள் கலங்க.

மாவட்ட நிர்வாகம் நல்ல நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உறவினர்களிடம் இருந்ததை காண முடிந்தது.

 

 

சார்ந்த செய்திகள்