புதுக்கோட்டையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் 5 வது மாவட்ட மாநாடு தோழர்கள் மனோ, ரேவதி, உதயகுமார் தலைமையில் கொடியேற் றத்துடன் தொடங்கியது மாணவர் பெருமன்றத்தின் மாநில துணைச் செயலாளர் தோழர் அருள்ராஜ்துரை கொடி ஏற்றி துவக்க உரையாற்றினார்.
யார் கையில் இந்தியா என்ற தலைப்பில் குரல் நெறி நாவலர் பெரியவர் தங்கவேலனார் உரையாற்றினார். ஊலக பொதுமறையான திருக்குரல் மட்டும் தான் அனைத்தையும் அலசி ஆராய்ந்து சொல்கிறது. குரல் நெறி நடந்தால் குற்றங்கள் நடக்காது. மனிதம் காக்கப்படும். சுமதர்மம் காக்கப்படும். மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் இல்லாத உலகத்தை உருவாக்க முடியும். அதனால் தான் என் தேனீர் கடை முன்பு தினமும் ஒரு திருக்குரல் எழுதி வைக்கிறேன். திருவள்ளுவர் தினத்தில் அனைவருக்கு ரூ. 1 க்கு தேனீர் வழங்கி வருகிறேன் என்றார். மேலும் இம்மாநாட்டில் அனைத்து அரசுபள்ளி கல்லூரிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுகாதாரமான கழிப்பறைகள் அமைக்க வேண்டும். அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் பெண்களுக்கான நாப்தலீன் எரிப்பு இயந்திரம் அமைக்கவேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும்.
தமிழக அரசு மாணவர்களின் கல்வி கடனை முழமையாக ரத்து செய்ய வேண்டும். எஸ்.சி,எஸ்.டி மாணவர்களுக்கு முழுமையாக கல்வி உதவித்தொகையை ரத்து செய்ததை திரும்ப பெற்று கல்வி உதவிதொகை பெறாமால் நிலுவையில் உள்ள மாவணர்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து அரசு பள்ளி கல்லூரிகளிலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.