தர்மபுரியில் பொதுமக்கள் பலர் உரிமம் இல்லாமல் வைத்திருந்த நாட்டு துப்பாக்கிகளை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஏரிமலை பகுதியில் பொதுமக்களில் பலர் உரிமம் இல்லாமல் வைத்திருந்த 13 துப்பாக்கிகளை தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் சிலர் விளை நிலங்களுக்குள் காட்டு விலங்குகள் வரக்கூடாது என்பதற்காக உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த வனத்துறையினர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள வெளியிட்டிருந்தனர். அதில் பொதுமக்களில் கள்ளத்துப்பாக்கி பயன்படுத்துபவர் யாரேனும் இருப்பின் அவர்களுடைய துப்பாக்கிகளை தானாக வந்து ஒப்படைத்தால் எவ்வித வழக்கும் பதிவு செய்யப்பட மாட்டாது. நாங்களாக கண்டறிந்தால் நடவடிக்கை இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள எரிமலை பகுதியில் உள்ள 12 பேர் தாங்கள் பயன்படுத்தி வந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.