Skip to main content

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

Published on 13/12/2017 | Edited on 13/12/2017
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க
இன்றே கடைசி நாள்!




டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளுக்காக விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான அறிவிக்கையை நவம்பர் 14-ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 13-ம் தேதி (இன்று) ஆகும். தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள் 15-ம் தேதி. குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடைசி நாளில் விண்ணப்பிக்க வரும் விண்ணப்பதாரர்களை கணக்கில் கொண்டு அதை எதிர்கொள்ளும் அளவில் தேவை யான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிரந்தரப் பதிவு செய்வதற்கு இரண்டு சர்வர் இணைப்புகளும் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இரண்டு சர்வர் இணைப்புகளும் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் தேவையான அளவு இன்டர்நெட் அலைவரிசையும் கொடுக்கப்பட்டுள்ளது. நிரந்தர பதிவு செய்யாதவர்கள் உடனடியாக பதிவு செய்ய தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், நிரந்தரப்பதிவு செய்யாதவர்கள் ரூ.150 செலுத்தி, நிரந்தரப்பதிவு செய்த பின்னரே தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் காரணங்களால் கடைசி நேரத்தில் விண்ணப்பிக்க முடியாமல் போனால் தேர்வாணையம் பொறுப்பல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது. இதுவரை சுமார் 15 லட்சம் விண்ணப்பதாரர்கள் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.


சார்ந்த செய்திகள்