Skip to main content

“குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும்” - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

 "Group 2 exam should be cancelled" - Anbumani Ramdas insists

 

டிஎன்பிஎஸ்சி தொகுதி இரண்டுக்கான முதன்மை தேர்வை நடத்துவதில் குளறுபடிகள்: தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.  

 

தமிழக அரசுத் துறைகளில் 5,446 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு கடந்த மே மாதம் குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய தேர்வுகள் நடைபெற்றன. இந்த முதல் நிலை தேர்வு எழுதியவர்களில் 57,641 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது அவர்களுக்கான முதன்மை தேர்வு இன்று தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தொகுதி இரண்டுக்கான முதன்மை தேர்வை நடத்துவதில் குளறுபடிகள்  நடந்துள்ளதாக பாமகவின் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தொகுதி இரண்டுக்கான முதன்மை தேர்வு ஏராளமான குளறுபடிகளுடன் மிகவும் தாமதமாகத் தொடங்கியுள்ளது. பல தேர்வு மையங்களில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததுதான் இக்குழப்பத்திற்கும் தாமதத்திற்கும் காரணமாகும். பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு அவற்றின் பதிவு எண்கள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் பல இடங்களில் வினாத்தாள் வெளியாகிவிட்டது. டிஎன்பிஎஸ்சியின் அலட்சியமே இதற்குக் காரணம்.

 

போட்டித் தேர்வுகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தேர்வர்களுக்கு மன உளைச்சல், பதற்றம் இல்லாத சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய தேர்வில் சமவாய்ப்பும் இல்லை; மன உளைச்சல் இல்லாத சூழலும் ஏற்படுத்தப்படவில்லை. சமவாய்ப்பு அற்ற சூழலில் நடத்தப்படும் தேர்வுகளில் சமநீதி கிடைக்காது. எனவே இன்றைய தேர்வை உடனடியாக ரத்து செய்துவிட்டு அனைத்து குளறுபடிகளையும் களைந்துவிட்டு வேறு ஒரு நாளில் அமைதியான சூழலில் இத்தேர்வை டிஎன்பிஎஸ்சி மீண்டும் நடத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்