Skip to main content

ஒற்றைப் புகைப்படத்திற்குப் பின் பெரும் சோகம் - கனக்க வைத்த பி.சி. ஸ்ரீராம்

Published on 18/07/2023 | Edited on 18/07/2023

 

 Great sadness after a single photo- P.C.Sriram

 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் பி.சி. ஸ்ரீராம். தமிழ்த் திரையுலகில் சில முக்கியமான திரைப்படங்கள் வரிசையில் இடம்பிடித்த மௌன ராகம், முகவரி, தேவர் மகன், நாயகன் உள்ளிட்ட பல படங்களின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பி.சி. ஸ்ரீராம். குருதிப்புனல், மீரா, வானம் வசப்படும் ஆகிய மூன்று திரைப்படங்களை  இவரே இயக்கியும் உள்ளார்.

 

அண்மையில் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அது சுவரில் மாட்டப்பட்ட அவருடைய மகள் ஸ்வேதாவின் புகைப்படமாகும். அதை பி.சி. ஸ்ரீராம் பார்த்துக் கொண்டிருப்பது போல் அந்த புகைப்படம் இருந்தது.

 

அந்த புகைப்படத்திற்குப் பின்னால் ஒரு பெரும் சோகமே அடங்கி இருக்கிறது. காரணம், கடந்த 2012 ஆம் ஆண்டு கீழ்பாக்கம் லண்டன் சாலையில் உள்ள தோழி ஒருவரின் வீட்டிற்குச் சென்ற பி.சி. ஸ்ரீராம் மகள் ஸ்வேதா, மொட்டை மாடியில் நின்று ஃபோன் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாகத் தவறி மாடியிலிருந்து சாலையில் விழுந்து உயிரிழந்தார். அப்போது அவருடைய வயது 23. அவர் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருந்தார். இந்நிலையில், அவரது மறைவு குறித்த தனது சோகத்தை வெளிப்படுத்தும் வகையில் பி.சி. ஸ்ரீராம் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்