டெங்கு காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் இருந்தால் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
சென்னை, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். அங்கு அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
"பெற்றோர்கள் விழிப்புணர்வோடு இருக்கவும் என்றும், மருத்துவர்கள் கூறும் அறிவுரையை முழுமையாக பின்பற்ற வேண்டும்" என்றும் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார். மேலும் டெங்கு குறித்து தவறான வதந்தி பரப்புவோர் மீதும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று எச்சரித்தார்.