
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராம மக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் வேலைவாய்ப்பு வேண்டியும், நலத்திட்டப் பணிகள் வேண்டி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்த வண்ணம் இருந்தனர்.
இந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி அரசு பணிகளான அங்கன்வாடி, கூட்டுறவு பணிகள், மற்றும் சத்துணவு, செவிலியர், மருந்தாளுநர் உட்பட பல்வேறு பணிகளுக்காக ஆத்தூர் தொகுதியை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வந்துள்ளது. தகுதி உள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு இல்லம் தேடி வரும். குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் ஆத்தூர் தொகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கானோருக்கு ஒரு ரூபாய் செலவில்லாமல் அரசுப் பணிகள் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர், கலைஞர் வழியில் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்து வரும் பொற்கால ஆட்சி.

கிராமங்களில் உள்ள இளைஞர்கள் விளையாட்டு துறையில் ஈடுபட்டு அரசுப் பணியை நோக்கி செல்லும் நிலைமை உருவாகி உள்ளது. இந்த பெருமை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையே சேரும், வருகின்ற அரசு வேலை வாய்ப்பு அனைத்தும் ஒரு ரூபாய் செலவில்லாமல் தகுதி உள்ளவர்களுக்கு வழங்கப்படும். குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்” என்று கூறினார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் வழ க்கறிஞர் காமாட்சி, பொருளாளர் சத்தியமூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர் நடராஜன், கிழக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் ஆ.நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் திண்டுக்கல் நெடுஞ் செழியன், வெள்ளி மலை, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் நெல்லை சுபாஷ். மாநகர பொருளாளர் மீடியாசரவ ணன், , பொதுக்குழு உறுப்பினர் அக்பர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இல.கண்ணன், இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம். அகரம் பேரூராட்சி தலைவர் நந்தகோபால் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.