Skip to main content

வக்கீல்கள் தாக்குவதை வேடிக்கை பார்த்த போலீசார்! - தற்கொலை முயற்சிக்கு முன் ஓட்டுநர் கடிதம்!

Published on 23/02/2018 | Edited on 23/02/2018



சிவகங்கையில் வழக்கறிஞர்கள் தாக்கியதால் மனமுடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநர், மரண வாக்குமூலம் எழுதி வைத்து விட்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையின் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரி வழக்கறிஞர் சங்கம் சார்பில், நேற்று காலை ஆட்சியர் அலுவலக வாயிலில் இருந்து ஊர்வலமாக சென்று அரண்மனை வாசல் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
 

letter


இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது பரமக்குடி நோக்கிச் சென்ற அரசுப்பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை இயக்க முயன்றார். இதனை தடுக்க சென்ற குரு தங்கப்பாண்டி என்கிற வழக்கறிஞர் கீழே விழுந்து காயமடைந்தார். இதனால், கோபம் கொண்ட சக வழக்கறிஞர்கள், அரசுப்பேருந்தின் ஓட்டுனர் செல்வராஜ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அரசு பேருந்து ஓட்டுநர் சட்டை கிழிக்கப்பட்டது.



இந்நிலையில், தாக்குதலுக்குள்ளான அரசுப் பேருந்து ஓட்டுனர் செல்வராஜ், தாம் தாக்கப்பட்டதை எண்ணி மனவேதனையடைந்த அவர் பரமக்குடியில் உள்ள தமது வீட்டுக்கு அருகே நேற்று பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பூச்சி மருந்தைக் குடிப்பதற்கு முன்னதாக மரண வாக்குமூலம் எழுதி தனது சட்டைப் பையில் வைத்துள்ளார்.

இதனிடையே அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிவகங்கை நகர காவல்நிலைய போலீசார், வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் குருதங்கப்பாண்டியன், மதி, ராஜாராம், செந்தில்குமார், வீரசிங்கம், வால்மீகநாதன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் பயணியிடம் தரக்குறைவாகப் பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்

Published on 07/01/2024 | Edited on 07/01/2024
Government bus driver suspended for insulting female passenger

பெண் பயணியிடம் தரக்குறைவாகப் பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அய்யன்கொல்லி என்ற பகுதியில் பெண் பயணி ஒருவர் கைக்குழந்தையுடன் கூடலூர் செல்வதற்காகப் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக அரசுப் பேருந்து ஒன்று வந்துள்ளது. இதையடுத்து அப்பெண்மனி, பேருந்தை நிறுத்த கைகாட்டியபோது ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து வந்த மற்றொரு பேருந்தில் ஏறிப் பயணித்து பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் பன்னீர் என்பவரிடம், ‘பேருந்தை ஏன் நிறுத்தவில்லை’ என அப்பெண்மணி கேட்டுள்ளார். அதற்கு ஓட்டுநர், அந்தப் பெண்மணியை தரக்குறைவாகத் திட்டியதாகப் புகார் எழுந்தது. மேலும் பெண்ணை தரக்குறைவாக ஓட்டுநர் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. இந்நிலையில் பெண் பயணியிடம் தரக்குறைவாகப் பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பன்னீரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

Next Story

அரசு பேருந்து ஓட்டுநருக்கும் தனியார் பேருந்து ஓட்டுநருக்கும் அடிதடி!

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Govt bus driver and private bus driver beaten

 

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணி நடந்து வருவதால் தற்காலிக பேருந்து நிலையம் கழுகுமலை இணைப்புச் சாலையில் இயங்கி வருகிறது. நேற்று(21.11.2023) மாலை அரசு பேருந்து ஒன்று திருநெல்வேலி செல்வதற்காக மாலை 5.15 மணியளவில் புறப்பட்டது. அதே சமயம் தனியார் பேருந்து ஒன்றும் 5.25 மணியளவில் புறப்படுவதாக இருந்தது. 5.15 மணிக்கு அரசு பேருந்தை எடுத்த டிரைவர் குமார், அந்நேரம் ஒரு பயணிவர, அவரை ஏற்றிக் கொள்ள பேருந்தை நிறுத்தியுள்ளார். 

 

அது சமயம் தனியார் பேருந்து ஒட்டுநர் ராமர் அரசு பேருந்துக்கு முன்பாக அவரது பேருந்தை எடுத்துச் சென்று “இப்ப எங்க டைம், உங்களுக்கு டைம் முடிந்துவிட்டது” என்று புறப்படாமல் இருந்ததாக அரசு பேருந்து ஒட்டுநரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பிறகு அது கைகளால் தாக்கிக் கொள்ளும் அளவாக மாறியிருக்கிறது. அவர்கள் தாக்கிக் கொண்டதில் காலனிகளை எடுத்து தாக்கி கொண்டுள்ளனர். பதற்றமாக நீடித்த இத்தகராறால் பேருந்து நிலையம் களேபரமானது. டிரைவர்களின் தகராறை பொதுமக்கள் தடுத்தும் இரு தரப்பு தகராறும், வார்த்தைகளும் அடங்குவதாகத் தெரியவில்லை. இதனிடையே அரசு பேருந்து ஒட்டுநர் குமார் கீழே விழ அவரை மீட்ட போக்குவரத்து ஊழியர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

 

தொடர்ந்து மற்றப் பேருந்துகளை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அது சமயம் பேருந்து நிலையம் வந்த சங்கரன்கோவில் பணிமனை கிளை மேலாளர் குமார் மற்றும் தொமுச நிர்வாகிகள், இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சந்தனராஜன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் என்றனர். இதையடுத்தே அனைத்து பேருந்துகளும் மீண்டும் இயக்கப்பட்டன. டவுன் போலீசார் சம்பவம் குறித்து தனியார் பேருந்து ஒட்டுநர் ராமரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பேருந்துகள் தரப்பட்ட நேரத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். தனியார் பேருந்துகள் விதியை மீறி செயல்படக் கூடாது. தற்காலிக பேருந்து நிலையத்தில் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீசாரை ஈடுபடுத்த வேண்டும் என்கிறார்கள் போக்குவரத்து பணியாளர்கள்.