நெல்லை மாவட்டத்தின் விவசாயிகளின் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷில்பா தலைமையில் நடந்தது.
அதில் கலந்து கொண்ட விவசாயிகளின் பயிர் காப்பீட்டு நிலுவைத்தொகை மூன்று வருடங்களாக கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
அண்மையில் மத்திய அரசு விவசாயிகளின் மாத ஓய்வூதியப் பிரீமியம் திட்டத்தினை பிரதமர் மோடி தலைமையில் அறிவித்தது. அதன்படி மாதப் பிரிமியமாக ரூ.200 செலுத்தினால் 60 வயது பின் பிரிமியத் தொகை கிடைக்கும். அது தொடர்பாகக் குறைதீர் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் துணை தலைவர் பெரும்படையார், மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் வேலுமயில் ஆகியோர்.
விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்திற்கு 18 முதல் 40 வயது வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை 50 வயது என தளர்த்த வேண்டும். மேலும் மாதப் பிரீமியம் ரூ.200 செலுத்த வேண்டும் என்பது விவசாயிகளுக்கு இயலாத காரியம். எனவே பிரிமியத்தை அரசே செலுத்த வேண்டும். ஓய்வூதியத் தொகையை வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 60 வயது என்பதை 55 என்றாகக் குறைத்து மாதம் 5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். என்று வலியுறுத்தியவர்கள் விவசாயிகளின் நிலையை விவரித்தார்கள்.
இது குறித்து அரசுக்குப் பரிந்துரைப்பதாக கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.