கத்தார் நாட்டின் தலைநகரான தோகாவில் 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து, தங்கம் வென்று தங்க மங்கையாக சாதனை படைத்தார்.
இவர் திருச்சி மாவட்டத் தில் உள்ள பின்தங்கிய கிராமமான முடிகண்டத்தைச் சேர்ந்தவர். இவர் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மாலை வந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அவருக்கு பொன்னாடை அணிவித்து மலர்க்கொத்து கொடுத்து வரவேற்புக்கொடுத்தார்.
தங்கம் வென்ற திருச்சி கோமதி மாரிமுத்துக்கு அடிப்படையில் பயிற்சி அளித்த ராஜாமணி, திருச்சி மாவட்ட தடகள சங்கம் செயலாளர் D.ராஜு, முடிகண்டம் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கணேசன், மக்கள் சக்தி இயக்கத்தினர், மனிதநேய அமைப்பை சேர்ந்தவர்கள், சமூகநீதி பேரவை வழக்கறிஞர் ரவி மற்றும் திமுகவை சேர்ந்த முத்துசெல்வம், துரைபாண்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பல்வேறு கட்சியினர், அவரோடு பயிற்சியில் ஈடுபட்ட தடகள வீரர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் பொன்னாடையணிவித்து வரவேற்புத்தந்தனர்.
திருச்சி விமானநிலையத்தையே திக்குமுக்காட வைத்தனர். திருச்சி வாசிகள். விமானநிலையத்திலிருந்து வெளியே வருவதற்கே 1 மணிநேரத்திற்கு மேலாக பொதுமக்களும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களுக்கு சால்வை ஆளுயர ரோசமாலை அணிவித்து மகிழ்ந்தனர்.
தங்க மங்கை கோமதி மாரிமத்து திருச்சி விமான நிலையத்தில் பேசிய போது…
ஆசிய போட்டியில் தங்கம் வெல்ல நான் ஓடும் போது காலணி கிழிந்திருந்தது உண்மை.
அது என்னுடைய அதிர்ஷ்ட காலணி. அனைத்து தரப்பினரும் என்னை பாராட்டுவது மிகுந்த உற்சாகத்தை தருகிறது. எனது அடுத்த இலக்கு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வது.
திருச்சி விமான நிலையத்தில் மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு. சொந்தவூரான முடிகண்டம் ஊருக்கு முன்னதாக மணிண்டம் பகுதியில் அளிக்கப்பட்ட வரவேற்பின் போது பேசியது அரசு தரப்பில் எனது கிராமத்திற்கு சாலை வசதியும் பேருந்து வசதியும் செய்து கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். அந்தக் கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்துள்ளேன். என்னை போல் ஏராளமான விளையாட்டு வீரர்கள் இங்கு உருவாக வேண்டும். அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன். எனக்கு பயிற்சி அளிப்பதற்காக எனது தந்தை உறுதுணையாக இருந்தார் . அவர் தற்போது என்னோடு இல்லாதது கவலையையும், வருத்தத்தையும் அளிக்கிறது என்று கண்ணீர் மல்க கோமதி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.