Skip to main content

திருச்சியில் தங்கம் விற்பனை முற்றிலும் ஸ்தம்பிப்பு

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

 

தமிழகத்தில் மிகப்பெரிய தங்க விற்பனை நடைபெறும் இடங்களில் திருச்சியும் ஒன்று. திருச்சி மட்டுமல்லாமல் தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், கரூர், அரியலூர், பெரம்பலூர் என திருச்சியைச் சுற்றியுள்ளவர்களும் திருச்சியில்தான் தங்க நகைகளை வாங்குவார்கள். 

 

gg



திருச்சியில் தங்க வியாபாரத்தில் ஈடுபட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த மூல் சந்த் என்ற தங்க வியாபாரி பல கோடி ரூபாயுடன் தலைமறைவானான். அதனைத் தொடர்ந்து 650 கிலோ வெள்ளியுடன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்த் சிங் என்பவனும் தலைமறைவானான். பழைய தங்கம் வாங்கி விற்கும் காதர் காந்த் என்பவன் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்துடன் தலைமறைவானான். இந்த நிலையில் காதர் காந்த் கேரளாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 

சுமார் 80 கோடி ரூபாய்க்கு இவர்கள் மோசடி செய்ததால், திருச்சியில் தங்கம் விற்பனை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. இதில் பெரிய வியாபாரிகள் மட்டுமல்லாமல், சிறிய வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். குடும்ப கஷ்டத்திற்காக திருச்சி நகரில் தங்கத்தை விற்பனை செய்ய வருபவர்களிடம்கூட சிறிய வியாபாரிகள் தங்கத்தை வாங்க முடியாத நிலையில் உள்ளார்களாம். 
 

-மகேஷ்

 

சார்ந்த செய்திகள்