நீதிபதி வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளிபொருட்கள் கொள்ளை
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ரஹ்மான்(45). இவர், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் முதன்மை குடும்பவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். தீபாவளி விடுமுறை என்பதால் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் சொந்த ஊரில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிபொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.