Skip to main content

கோகுல்ராஜ் வழக்கு விசாரணை பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Published on 26/01/2019 | Edited on 26/01/2019
y

 

பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சிகள் விசாரணையை வரும் பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைத்து, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.


சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23), கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவருடைய சடலம், மறுநாள் மாலையில் கைப்பற்றப்பட்டது. 


இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை திருச்செங்கோடு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் கடந்த 2018, ஆகஸ்ட் 30ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை  நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. 

 

a


யுவராஜ் கூட்டாளிகளுள் ஒருவரான சதீஸ் என்கிற சதீஸ்குமார் உள்பட 11 குற்றவாளிகளை கைது செய்ததில், திருச்செங்கோடு விஏஓ மணிவண்ணன் என்பவரை போலீசார் அரசுத்தரப்பு சாட்சியாக சேர்த்திருந்தனர். அவர், கடந்த 10, 11 மற்றும் 18ம் தேதிகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். குற்றவாளிகள் கைது  செய்யப்பட்டபோது அவர்களிடம் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் குறித்தும் அடையாளம் காட்டினார்.

 

s


இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 25, 2019) அவரிடம் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் ஜி.கே. என்கிற கோபாலகிருஷண லட்சுமணராஜூ மற்றும் சண்முகம் ஆகியோர் குறுக்கு விசாரணை நடத்தினர்.


சிசிடிவி வீடியோ காட்சிகள், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டபோது உடன் இருந்தீர்களா? ஒப்புதல் வாக்கமூலம் உங்கள் முன்னிலையில் பெறப்பட்டதா? உள்ளிட்ட கேள்விகளைக் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டனர். இதையடுத்து, மற்ற அரசுத்தரப்பு சாட்சிகளிடம் வரும் பிப்ரவரி 1ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி இளவழகன் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் யுவராஜின் கார் ஓட்டுநரான அருண், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் அழைத்து வர எஸ்கார்ட் போலீசார் இல்லாததால், வெள்ளிக்கிழமையன்று நடந்த விசாரணக்கு அவரை ஆஜர்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு கோவா அரசு நோட்டீஸ்

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

Goa govt notice to cricketer Yuvraj Singh

 

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு கோவா சுற்றுலாத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். பல முக்கியமான போட்டிகளில் சிறப்பாக ஆடி இந்திய அணி போட்டியில் வெல்வதற்கும் இரு உலகக்கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். இடையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு அதில் இருந்து மீண்டு வந்த யுவராஜ் மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார். இருந்தும் புற்றுநோய்க்கு முன்பு இருந்த ஆட்டம் வெளிப்படாததால் 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.   

 

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த யுவராஜ் சிங் கோவா மாநிலத்தில் மோரிஜிம் அருகே வர்ச்சவாடாவில் காசா சிங் என்றொரு சொகுசு வீட்டினை வாங்கியுள்ளார். தனது சொகுசு வீட்டை வாடகைக்கு விட்டுள்ள யுவராஜ் சிங் அதை அம்மாநில சுற்றுலாத்துறையிடம் முறையாக பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து கோவா மாநிலத்தின் சுற்றுலாத்துறை இணை இயக்குநர் ராஜேஷ் காலே யுவராஜ் சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

அதில் டிசம்பர் 8 ஆம் தேதி யுவராஜ் சிங் நேரில் ஆஜராகி விளக்கம் தரவேண்டும் என்று கோவா சுற்றுலாத்துறை உத்தரவிட்டுள்ளது. யுவராஜ் சிங் ஆஜராகி முறையாக விளக்கம் தரவில்லை எனில் விதிமீறல் குற்றத்திற்காக அபராதம் அல்லது தண்டனை விதிக்கப்படும் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Next Story

'யுவராஜுக்கு பிணை வழங்குவது குறித்து முடிவெடுக்க இயலாது'- உயர்நீதிமன்றக் கிளை திட்டவட்டம்! 

Published on 07/06/2022 | Edited on 07/06/2022

 

'It is not possible to decide on granting bail to Yuvraj' - High Court branch plan!

 

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு பிணை வழங்குவது குறித்து முடிவெடுக்க இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 

 

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மதுரை கீழமை நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரியும், பிணை வழங்கிட வேண்டுமென்றும் 10 பேரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். 

 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு பிணை வழங்குவது குறித்து, முடிவெடுக்க இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றும், வழக்கு தொடர்பான ஆவணங்களை கீழமை நீதிமன்றத்தில் இருந்து பெறவும் நீதித்துறைப் பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

அதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை வரும் ஜூலை 6- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.