Skip to main content

நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை! 

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

Girl passes away after wrote her neet exam

 

அரியலூர் மாவட்டம், துளாரங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. வழக்கறிஞரான இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகள் கனிமொழி, ஜெயங்கொண்டம் அருகே உள்ள தனியார்ப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 469 மதிப்பெண் பெற்ற நிலையில், நாமக்கல் கீரீன் கார்டன் பள்ளியில் தனது 12ஆம் வகுப்பை முடித்துள்ளார். இதில் அவர், 600க்கு 562.28 மதிப்பெண் பெற்றார். சதவீதத்தில் கணக்கிடும்போது இது 93 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவராக வேண்டும் எனும் கனவுடன் இருந்த அவர் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார். 

 


கடந்த ஞாயிற்றுக் கிழமை நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில், அவர் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் இன்டர் நேஷனல் பள்ளியில் நீட் தேர்வை எழுதினார். தேர்வு எழுத மாணவி கனிமொழி தந்தையுடன் சேன்று வீடு திரும்பியிருந்தார். தேர்வு முடிந்து வீடு திரும்பியதிலிருந்தே அவர் மன அழுத்தத்துடனே இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. கனிமொழியின் தந்தையும், தாயும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் வீட்டுக்கு வந்து கதவைத் திறந்து பார்த்த பொழுது, மாணவி கனிமொழி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அவரின் பெற்றோர் கதறி அழுதனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்