Published on 17/07/2021 | Edited on 17/07/2021

விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகளை உடனே கைவிட வேண்டும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “கொச்சியிலிருந்து பெங்களூரு வரை எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் மீண்டும் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டு பகுதியான ஓசூர் அருகே கெலமங்கலத்தில் விளைநிலங்களில் குழி தோண்டப்பட்டு, எரிவாயு குழாய்கள் பதிக்கப்படுவதைத் தமிழ்நாடு முதல்வர் தடுத்து, விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலை ஓரம் இந்த எரிவாயு குழாய்களைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தற்போது விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகளை உடனே கைவிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.