Skip to main content

ஸ்ரீரங்கத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துாருக்கு அனுப்பப்பட்ட வஸ்திரம், மாலைகள்...

Published on 10/08/2021 | Edited on 10/08/2021

 

The garments and garlands sent from Srirangam to Srivilliputhur ...

 

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் ஆடிபூரம் தேர் திருவிழா அன்று ஆண்டாள் –ரெங்கமன்னாருக்கு ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சூடிய மாலை அணிவிப்பது வழக்கம். வரும் 11ஆம் தேதி (புதன்கிழமை) ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரம் தேர் திருவிழா நடைபெறுகிறது.

 

இதனை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயில் தேவஸ்தானம் சார்பில் நாளை (11.08.2021) வஸ்திரம், மாலைகள், சந்தனம், மஞ்சள், குங்குமம், வளையல், பல வகையான பழங்களை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வழங்கப்பட உள்ளது. இதன் காரணமாக இன்று மாலை ஸ்ரீரெங்க விலாச மண்டபத்தில் வஸ்திரங்கள், மாலைகள் மற்றும் மங்களப் பொருட்கள் ஆகியவை பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து, உதவி ஆணையர் கு. கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் மா. வேல்முருகன், அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்