திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள ஐ.என்.ஏ தியாகி வெள்ளைச்சாமி, சுதந்திர போராட்ட வீரரான அவர் அண்ணாநகரில் குடும்பத்தினருடன் வசிக்கும் வருகிறார். வீடு வீட்டு வசதிவாரிய இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளார் என அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு கடந்த 15 வருடத்திற்கு மேலாக இந்த வழக்கு நடந்து வந்திருக்கிறது.
இந்த நிலையில் காலையில் வீட்டுவசதி வாரியத்தின் செயற்பொறியாளர் மனோகரன் தலைமையில் அதிகாரிகள் நவல்பட்டு போலிசார் பாதுகாப்புடன் வந்தர். எங்கள் வீட்டுவசதிய வாரியத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டியிருக்கிறீர்கள் என்று நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதமாக தீர்ப்பு வந்துள்ளது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் தியாகி வெள்ளைசாமியோ எனக்கு எந்த தகவலும் இல்லை, தீர்ப்பும் கிடைக்கவில்லை என்று கூறி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆனால் இதை எல்லாம் பொறுப்படுத்தாத அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி உள்ளார்கள். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தியாகி மயக்கம் போட்டு கீழே விழுந்ததுள்ளார் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.
இதை எல்லாம் கண்டுகொள்ளாத அதிகாரிகள் தியாகியின் வீட்டை இடித்தள்ளிவிட்டு சென்றிருக்கிறார்கள். இது குறித்து தியாகிகள் தரப்பில் நாம் விசாரித்த போது. இந்த பகுதி முழுவதும் தியாகிகளுக்கு என்று 5 ஏக்கர் தமிழக அரசால் கொடுக்கப்பட்டது. எல்லோரும் அவர்களுக்கு கொடுத்த இடத்தை விற்றுவிட்டு வேறு இடத்திற்கு மாறி சென்று விட்டனர். ஆனால் நாங்கள் இதே இடத்தில் வீட்டு கட்டி இங்கேயே விவசாயம் செய்து வருகிறோம்.
இதற்கு இடையில் வீட்டுவசதி வாரியத்துறை இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்று வழக்கு தொடர்ந்தனர். திருவரம்பூர் டி.ஆர்.ஓ. தலைமையில் பேச்சுவார்தை நடைபெற்றது. இதில் எங்களுக்கு 2 ஏக்கர் மாற்று இடமும் இங்கே வீட்டு வசதி வாரியத்தால் கட்டும் கட்டிடங்களில்“ 2 வீடு தருவதாகவும் சொன்னார்கள். நாங்கள் எங்களுக்கு மாற்று இடம் வேண்டாம் என்று சொல்லி மறுத்து விட்டோம்.
ஆனால் தற்போது எந்தவித முன் அறிவிப்பு இன்று தீடீர் தங்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றி வீட்டை இடித்து விட்டார்கள். இது தான் சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு இந்த ஆட்சியில் கிடைத்த பரிசு என்று ஆதங்கப்பட்டார்.
வீட்டை இடித்தது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார்கள்.