சேலம் அரசு ஐ.டி.ஐயி.ல், கைக்கடிகாரம் மற்றும் சுவர் கடிகாரம் பழுதுபார்க்கும் மூன்று மாத கால இலவச பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, சேலம் அரசு ஐ.டி.ஐயில் கைக்கடிகாரம் மற்றும் சுவர் கடிகாரம் பழுதுபார்க்கும் மூன்று மாத குறுகிய கால இலவச பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. டைட்டான் நிறுவனத்தின் திறன்மிக்க பயிற்றுநர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியை முடித்தவுடன் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேரலாம். பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 14 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். பயிற்சியில் சேர ஏப். 20ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு 'துணை இயக்குநர், அரசு ஐ.டி.ஐ, ஏற்காடு மெயின் ரோடு, சேலம் - 636007' என்ற முகவரியில் நேரிலோ அல்லது 9500671416 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இப்பயிற்சிக்கு ஆன்லைன் (Link to apply: https://forms.gleZqzMhNtVKp4hAhsw7) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.