Skip to main content

'பிராங்க் ஷோ'வுக்கு தடை:உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

பிராங்க் ஷோ எனப்படும் குறும்பு படங்களை எடுக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை தடைவிதித்துள்ளது.

 

டிக் டாக் செயலியை தடைசெய்யகோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தொடுத்த வழக்கு உயநீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.

 

order

 

இந்த வழக்கின் விசாரணையில் டிக்டாக் செயலியை தடை செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்த அறிக்கையை  மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் சமூக தீங்கான ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடைவிதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது எனவும் கருத்து தெரிவித்தனர்.

 

பிராங்க் ஷோ போன்றவற்றால் தனித்தமனித சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற ஷோக்களில் ஏற்படும் அதிர்ச்சி காரணமாக உயிரிழப்புகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் பிராங்க் ஷோ எனப்படும் குறும்பு வீடியோக்கள் எடுக்கவும், வெளியிடவும் தாடைவிதிப்பதாகவும்  உத்தரவிட்டனர்

 

 

சார்ந்த செய்திகள்