அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர் சென்னை அமைந்தக்கரை பகுதியிலுள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அடாவடி செய்து வருகிறார் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னை அமைந்தக்கரை எம்.ஹச். காலனி 106 வட்டத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கால்வாய் ஒட்டியபடி இருக்கும் 55 சென்ட் இடத்தை அப்பகுதி மக்களுக்கு, தெருவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவரின் வலது கையாக இருக்கும் நபர் ஒருவர் மூலமாக அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து தற்போது கோடிக்கணக்கில் விற்பனை செய்து வர தொடங்கியுள்ளனர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் 106 வட்ட ஏ.ஈ தொடர்பு கொண்டு பேசிய போதும் எந்த நடடிக்கையும் எடுக்கவில்லை, அனைவருமே அந்த முன்னாள் அமைச்சருக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகிறார்கள். தற்போது அந்த இடத்தை எங்களுக்கு பாதையாக மாற்றி கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைததுள்ளனர். இதன் தொடர்பாக முன்னின்று யார் வேலைசெய்தாலும் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுகிறார்கள் என அச்சத்தில் தன் பெயரை கூட போடவேண்டாம் என்று அச்சத்தோடு இச்செய்தியை நம்மிடம் தெரிவித்தார்கள்.
இதன் தொடர்பாக மாநகராட்சி கமிஷ்னர் பிரகாஷ் இடம் பேசிய போது, இது போன்று இடத்தை நிச்சியம் ஆக்கிரமித்து இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அரசு இடத்தை அரசில்வாதிகள் ஆக்கிரமிப்பு தெய்வதும் அதை கண்டும் காணாமல் இருப்பதும் வாடிக்கையாகவே இருந்துவருகிறது.