Skip to main content

அரியலூரில் பொங்கல் விழாவைக் கொண்டாடிய வெளிநாட்டினர்!

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

foreigners celebrated in pongal festival at  ariyalur district 

 

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் ரீடு தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் அன்பகத்தில் 14 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொழில் பயிற்சியுடன் கூடிய இல்லம் செயல்பட்டு வருகிறது. மேலும் இங்கு  சுமார் 30க்கும் மேற்பட்ட மன வளர்ச்சி குறைபாடு உடைய பெண்கள் தொழில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டுதோறும் இந்த நிலையத்தில் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம்.

 

இந்த ஆண்டு அமெரிக்காவில் வசிக்கக்கூடிய மருத்துவர் கேயன் வான் ராம்பே, ராபின், வேர்லி ஆகியோர் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாட அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தனர். வந்திருந்த வெளிநாட்டினர் அனைவரும் தமிழரின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து ஆண்டிமடம் ரீடு தொண்டு நிறுவனத்திற்கு வருகை தந்து அங்கு பயிற்சி பெறும் பெண்களுடன் இணைந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பாகக் கொண்டாடினர். அங்கிருந்த மாற்றுத் திறனாளி பெண் குழந்தைகளுடன் கலந்து பேசி அவர்களுக்குப் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

 

மேலும் அவர்கள் நமது தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கும்மியடித்து செங்கரும்புடன் கூடிய பொங்கல் பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு வழிபாடு செய்வதை நேரில் பார்வையிட்டு அதன் விளக்கத்தையும் கேட்டறிந்தனர். அவர்களும் சூரியனை வழிபட்டனர். அங்கிருந்த அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பின்னர் அனைவரும் பொங்கல் உணவை ரசித்து உண்டு மகிழ்ந்தனர். தமிழர்களின் பாரம்பரிய விழாவில் தாங்களும் கலந்துகொண்டு பங்கேற்று சிறப்பித்தது தங்களுக்கு மகிழ்ச்சியாகவும்,  பெருமையாகவும் இருப்பதாகக் கூறினர்.

 

foreigners celebrated in pongal festival at  ariyalur district 

ரீடு தொண்டு நிறுவனத்தில் இருந்தவர்களும், "இவ்வாண்டு வெளிநாட்டினர் தங்களுடன் வந்து கலந்துகொண்டு பொங்கலைக் கொண்டாடியது மகிழ்ச்சியாகவும் புதிய அனுபவமாக இருப்பதாகவும்" கூறினர். வெளிநாட்டினர் நம் தமிழக மக்களுடன் கொண்டாடிய பொங்கல் விழா நிகழ்ச்சி ஆண்டிமடம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்