தினகரனுக்கு காய்ச்சல்!
ஓபிஎஸ் -இபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்து தியானத்தில் ஈடுபட்டுள்ளனர். தினகரனுடனான ஆலோசனைக்குப் பின்னர் மெரினா வந்து நினைவிடத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தியானத்திற்கு தினகரன் வரவில்லை. காய்ச்சல், தொண்டைவலி உள்ளதால் நாளை மறுதினம் 23ம் தேதி செய்தியாளர்களை சந்திப்பதாக தினகரன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.