கரூர் தாந்தோன்றிமலை என்.ஜி.ஓ நகர் பகுதியில் வசித்து வருபவர் சேகர். இவர் தனது வீட்டில் குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்து சில்லறை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தாந்தோன்றிமலை உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் சேகர் வீட்டில் சோதனை செய்தனர். அதில் சுமார் 14 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து சேகரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சேகரிடம் இருந்து குட்கா பொருட்கள் வாங்கி தான்தோன்றிமலை பகுதியில் விற்பனை செய்து வரும் கார்த்திக், வெங்கடேஷ், முத்துச்சாமி, பாக்கியராஜ் ஆகிய நால்வர் இடத்திலும் சோதனை மேற்கொண்டனர். அந்தச் சோதனையில் அவர்களிடம் இருந்து 3 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.