தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை பின்பற்றாததால் வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ''தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு வாழ்த்துகள். சரியான திசை நோக்கிய முதல் அடிதான் ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி மறுப்பு. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உங்களுக்குத் துணையாய் மக்களும் கண்காணிக்கத் துவங்கி விட்டார்கள்'' என கூறியுள்ளார்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு வாழ்த்துகள். சரியான திசை நோக்கிய முதல் அடிதான் ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி மறுப்பு. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உங்களுக்குத் துணையாய் மக்களும் கண்காணிக்கத் துவங்கி விட்டார்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) April 10, 2018