
திருவண்ணாமலை நகர மன்ற தலைவராக 2011 முதல் 2016 வரை இருந்தவர் அதிமுகவை சேர்ந்த பாலச்சந்தர். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராகவும் சில ஆண்டுகள் இருந்தார்.
பாலச்சந்தர் நகரமன்ற தலைவராக இருந்தபோது, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் புதியதாக கடைகள் கட்டப்படவுள்ளது. அதில் இரண்டு கடைகள் ஒதுக்கி தருகிறேன் எனச்சொல்லி 2014ல் விஜயசங்கர் என்பவரிடம் 16 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார். ஆனால் சொன்னதுப்போல் கடைகள் கட்டித்தரவில்லை. 2016ல் பாலச்சந்தர் பதவிக்காலமும் முடிந்தது.
கடை தான் தரவில்லை, நான் தந்த பணத்தை திருப்பித்தா எனக்கேட்டு கணேசன் பாலச்சந்தர் வீட்டுக்கு நடையாக நடந்துள்ளார். ஒருக்கட்டத்தில் பணம் தர முடியாது உன்னால முடிஞ்சதை பார்த்துக்க எனச்சொன்னதாக தெரிகிறது. இதனால் கோபமான கணேசன் திருவண்ணாமலை காவல்துறை குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் இருதரப்பையும் அழைத்து விசாரித்தபோது, பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி தந்துவிடுகிறேன் எனச்சொல்லி முதல் கட்டமாக 4 லட்ச ரூபாய்க்கு காசோலை தந்துள்ளார். அந்த காசோலையில் பணமில்லாமல் திரும்பி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான கணேசன், இதுப்பற்றி குற்றப்பிரிவில் புகார் கூறியதின் அடிப்படையில் செப்டம்பர் 3 ந்தேதி அதிமுக பிரமுகர் பாலச்சந்தரை எஸ்.பி அலுவலகத்துக்கு விசாரணை என அழைத்து உட்கார வைத்துவிட்டனர்.
காலை முதல் எஸ்.பி அலுவலகத்திலேயே உள்ளார் அதிமுக முன்னால் மா.செ பாலச்சந்தர். ஆளும்கட்சி பிரமுகர் ஒருவரை விசாரணைக்காக அழைத்து உட்காரவைத்து, பணத்தை தர்றியா, ஜெயிலுக்கு போறியா என கேள்விகளால் மிரட்ட தற்போது வரை விசாரணை முடியவில்லை. இதனால் பாலச்சந்தர் குடும்பம் பதட்டமாகயிருக்க அதிமுக பிரமுகர்கள் யாரும் இதனை கண்டுக்கொள்ளவில்லை என்கின்றனர்.