Skip to main content

மாணவி அனிதாவின் இறப்பிற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்! போராட்டத்தில் தமிழகம்!

Published on 02/09/2017 | Edited on 02/09/2017
மாணவி அனிதாவின் இறப்பிற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்! போராட்டத்தில் தமிழகம்!



நீட் தேர்விற்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய ஏழை மாணவி அனிதா, மருத்துவம் படிக்க முடியாமல் போனதை நினைத்து வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே போராட்டகளமாக மாற்றி வருகிறது.

அரியலூர் மாவட்டம் செந்துரை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த சுமைத்துக்கும் தொழிலாளரான சண்முகத்தின் மகள் அனிதா. அனிதாவின் தாயார் ஆனந்தம் 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். தாயில்லாத சோகம் தெரியாத வகையில் மகளை வளர்த்தார் சண்முகம், பரப்பதில் கெட்டிக்காரியாக விளங்கிய அனிதாவிற்கு மருத்துவராவதே லட்சியமாக கொண்டிருந்தார், அவரது தந்தை சண்முகத்திற்கும் தனது மகள் மருத்துவர் ஆக வேண்டும் என்பதே கனவாக கொண்டிருந்தார்.

அதே லட்சியத்துடன் படித்த அனிதா +2 பொதுதேர்வில் 1,176 மதிப்பெண் பெற்றார், மருத்துவ கட்டாஃ பில் 196.7 பெற்றிருந்தார். இந்த நிலையில் மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகம் செய்தது. அதில் முறையான பயிற்சி இல்லாமல், பயிற்சி வகுப்புக்கு போவதற்கு வசதியில்லாமல், 86 மதிப்பெண்களே கிடைத்தது. மன வேதனை அடைந்த அனிதா தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அணிதாவின் இறப்பிற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பு என தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள பந்தநல்லூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓ.செ.முருகப்பன் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான விசிகவினர் பேரணி, ஆர்பாட்டம் செய்தனர்.

போராட்டத்தில் மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்தனர். அதோடு, மோடியின் உருவபடத்தை எரித்து செருப்பால் அடித்து எதிர்ப்பை பதிவு செய்தனர். அதே போல் கும்பகோணத்திலும் போராட்டம் நடந்தது.

- க. செல்வகுமார்.

சார்ந்த செய்திகள்